• May 02 2024

கேக் வெட்டி பிறந்த நாளைக் கோலாகலமாகக் கொண்டாடிய சிவகார்த்திகேயன்- வெளியாகிய பேர்த்டே கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஆரம்ப காலங்களில் மிமிக்ரி, டிவி தொகுப்பாளராக பணியாற்றி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவர் தொகுப்பாளராக விஜய் டிவியில் பணியாற்றிய போது கலக்க போவது யாரு?, அது இது எது, ஜோடி நம்பர் 1 போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 


இது போக பல விருது நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா, பட வெற்றி விழாக்களையும் தொகுத்து வழங்கி உள்ளார்.தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.


ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குநர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.இந்த படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயன் தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது அவர் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement