• May 03 2024

மாவீரன் படத்தின் முதல் ஷோவைப் பார்க்க காசி தியேட்டருக்கு வந்த சிவகார்த்திகேயன்- வைரலாகும் வீடியோ

stella / 9 months ago

Advertisement

Listen News!


சிவகார்த்திகேயனின் டான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு 'பிரின்ஸ்' வெளியானது. இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. ஒரே வாரத்தில் திரையரங்குகளில் இந்தப்படம் தூக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது  சிவகார்த்திகேயன்'மாவீரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 

வடசென்னையை மையமாக வைத்து அரசியல் பின்னணியில் இந்தப்படம் உருவாகியுள்ளது. யோகி பாபு நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'மண்டேலா' படத்தினை இயக்கிய மடோன் அஸ்வினின் இரண்டாவது படைப்பாக 'மாவீரன்' உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் டாக்டர் படம் போல் முற்றிலும் வேறு விதமாக தன்னுடைய நடிப்பை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.


இந்நிலையில் இன்று வெளியாகவுள்ள 'மாவீரன்' படம் குறித்த விமர்சனங்கள் இணையத்தில் வலம் வர துவங்கியுள்ளன. அதன்படி 'மாவீரன்' முழு படத்தையும் பார்த்துள்ள விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து படம் செம்மையா இருக்கு என பாராட்டியுள்ளராம். இதனை சிவகார்த்திகேயன் மேடை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதே போல் உதயநிதி ஸ்டாலின் 'மாவீரன்' படத்தை பார்த்துவிட்டு அருமை என தம்ஸ் அப் எமோஜியை பதிவிட்டுள்ளார். படத்திற்கு தற்போதே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ளதால் கொண்டாட்டத்தில் உள்ளனர் ரசிகர்கள்.இப்படியான நிலையில் படத்தின் முதல் ஷோவைப் பார்ப்பதற்காக சிவகார்த்திகேயன் காசி தியேட்டருக்கு வந்துள்ளார் இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement