• Mar 25 2026

ஒரு வழியா சூப்பர் கதாநாயகியை பிடித்துவிட்ட சிவகார்த்திகேயன்.. இன்று முதல் படப்பிடிப்பு

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

 நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பக்கம்  ’எஸ்கே 21’ படத்தில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் அந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் நாயகி ஆக மிருணாள் தாக்கூர் நடிப்பார் என்றும் ஒரு சில பாலிவுட் பிரபல நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

 இந்த நிலையில் தற்போது வந்து வந்துள்ள தகவல் படி இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருப்பது ருக்மணி வசந்த் என்று தெரியவந்துள்ளது.  பெங்களூரை சேர்ந்த இவர்  சில கன்னட படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் ஒரு சில  தெலுங்கு படங்களிலும் நடந்து வருகிறார். அது மட்டும் இன்றி விஜய் சேதுபதி நடித்து வரும் 51 வது படத்தில் இவர்தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் தற்போது ருக்மணி வசந்த், சிவகார்த்திகேயன் ஜோடியாக  ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement