• Jun 07 2025

முதல் 3 இடத்திற்குள் ‘சிறகடிக்க ஆசை’.. பின்னுக்கு தள்ளப்பட்ட சன் டிவி சீரியல்கள்.. டிஆர்பி விவரங்கள்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

பொதுவாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் டிஆர்பியில் முதல் மூன்று இடத்திற்குள் வரும் என்ற நிலையில் தற்போது மூன்றாவது இடத்தை விஜய் டிவியின் ’சிறகடிக்க ஆசை ’பிடித்ததை அடுத்து சன் டிவி சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள சீரியல் குறித்து தற்போது பார்ப்போம்.

நான்காம் இடத்தில் வானத்தைப் போல சீரியல் உள்ளது. அதற்கு 7.64 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. வழக்கமாக சன் டிவி சீரியல்கள் தான் டாப் 3 இடங்களை ஆக்கிரமித்து இருக்கும். ஆனால் இந்த முறை அதையெல்லாம் பின்னுக்கு தள்ளி 8.14 புள்ளிகளுடன் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களை சிங்கப்பெண்ணே, கயல் ஆகிய சீரியல்கள் பிடித்துள்ளன. இதில் கயல் சீரியலுக்கு 9.09 டிஆர்பி புள்ளிகளும், சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 9.10 புள்ளிகளும் கிடைத்துள்ளது.

1. சிங்கப்பெண்ணே - சன் டிவி

2. கயல் - சன் டிவி  

3. சிறகடிக்க ஆசை - விஜய் டிவி

4. வானத்தை போல - சன் டிவி

5. பாக்கியலட்சுமி - விஜய் டிவி

6. எதிர்நீச்சல் - சன் டிவி

7.சுந்தரி 2  - சன் டிவி

8. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - விஜய் டிவி

9. மல்லி - சன் டிவி

10. சின்ன மருமகள் - விஜய் டிவி

Advertisement

Advertisement