தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இருந்தாலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் தான் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகம் காணப்படுகின்றது.
அந்த வகையில் இவர் நடிக்க இருக்கும் திரைப்படம் தான் பத்து தல. கன்னட சினிமாவில் வெளியாகி ஹிட்டடித்த மப்டி படத்தின் ரீமேக் தான் இந்த படம். இப்படத்தினை ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார்.
இந்த படத்தில்கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.
இப்போது சில பல மாற்றங்களோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு சிம்பு இல்லாத மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. சிம்புவுக்காக படக்குழு காத்திருக்கிறது.
படப்பிடிப்பு தளத்தில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டு டிரெண்டாக்கி வருகிறார்.
மேலும் இந்த படத்திற்காக மீண்டும் சற்றே தனது உடல் எடையை அதிகரித்து இருக்கிறார் நடிகர் சிம்பு என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், தொட்டி ஜெயா படத்தில் பார்த்ததை போல கருப்பு சட்டை, தாடி என தெறி மாஸாக உள்ளார். கன்னடத்தில் வெளியான மஃப்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிற செய்திகள்
- தனுஷை போலவே இசை வெளியீட்டு விழாவில் கெத்து காட்டிய மகன்கள்- அனிருத் போட்ட குத்தாட்டம்-வைரலாகும் வீடியோ..!
- யாருப்பா இந்த கிளியோபாற்றா…. நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வீடியோவுக்கு லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!
- என்னம்மா இது..முழு அங்கத்தையையும் காட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட ஷெரின்
- வீட்டுக்கு வந்து பாக்கியா கொடுத்த அதிர்ச்சி.. மிரண்டு போன குடும்பத்தினர் – இன்றைய முழு எபிசோடு அப்டேட்
- பங்ஷனில் கண்ணம்மா கொடுத்த ஷாக் – பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!