• Aug 07 2025

பணத்திற்காக அப்படி செய்தாரா.?பிரபல நடிகை மீது போலீஸ் புகார்.. பேரதிர்ச்சியில் திரைத்துறை

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் தான் ஸ்வேதா மேனன். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையிலும் தொடர்ச்சியாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார்.

1991 ஆம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்ற மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமானார் ஸ்வேதா மேனன். அதன் பின்பு பலரது கவனத்தையும் ஈர்த்த ஸ்வேதாவுக்கு தமிழிலும் வாய்ப்புகள் குவியத்  தொடங்கின.

சிநேகிதியே என்ற படத்தின் மூலம் ஹோலிவுட்லும் அறிமுகமானார்.  பின்பு நான் அவன் இல்லை 2, அரவான், துணை முதல்வர் போன்ற படங்களில் நடித்தார். தமிழில் இறுதியாக இணையதளம் என்ற படத்தில் நடித்திருந்தார்.


இவருடைய முதலாவது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதன்பின்பு 2011 ஆம் ஆண்டு ஸ்ரீவர்சன் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அதன் பின்பும் அவர் தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்த நிலையில் நடிகை ஸ்வேதா மேனன் மீது போலீஸ் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. குறித்த புகாரில் ரதிநிர்வேதம், களிமண் போன்ற படங்களில் அதிக கவர்ச்சி காட்டி நடித்துள்ளதாகவும், ஆபாசமான விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளதோடு இவையாவும் அவரின் நிதி தேவைக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.


ஆனாலும் குறித்த புகார் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் எதிர்வரும் 15ம் திகதி  மலையாள திரைத் துறையினரின் நடிகர் சங்கமான அம்மா அமைப்புக்கான நிர்வாக குழு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் தலைவர் பதவிக்கு ஸ்வேதா மேனன் போட்டியிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement