• May 19 2024

கடுமையாக உடற்பயிற்சி செய்து வரும் ஸ்ருதிஹாசன்- என்ன இது பார்க்க அவர் போலவே தெரியலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் சினிமாவில் வாரிசு நடிகை என்ற அடையாளத்தோடு அறிமுகமாகியவர் தான் ஸ்ருதிஹாசன்.இவர் இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த 'லாபம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நீண்ட காலம் படவாய்ப்பின்றி இருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் கே ஜி எப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் 'சலார்' படத்தில் பிரபாஸுற்கு ஜோடியாக நடித்திருந்தார்.. இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுவதோடு மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படவுள்ளது.

ஜனவரி 2021 இல் தெலுங்கானாவின் கோதாவரிகானியில் படத்தின் முதன்மை படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.

மேலும் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாலகிருஷ்ணாவை தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவியுடன் மெகா154 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள படத்திலும் நடிக்கிறார்.இந்த நிலையில் கடுமையான வொர்க்கவுட் செய்த பின்னர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement