• Apr 27 2024

மழைக்கு நடுவே ஸ்ருதி ஹாசன்... குடையோடு கொடுத்த க்யூட்டான போஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரைத்துறையில் 'லக்' என்ற ஹிந்தி படம் மூலம் 2009-ஆம் ஆண்டில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள்ஆவார். 


இவர் தமிழில் 2011-ஆம் ஆண்டு வெளியான 'ஏழாம் அறிவு' படத்தின் வாயிலாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தனுஷுடன் '3', ஹிந்தியில் 'டி-டே', நடிகர் விஜய் உடன் 'புலி', நடிகர் அஜித்துடன் 'வேதாளம்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.


இவரை தமிழ், ஹிந்தியில் மட்டுமல்லாது தெலுங்கிலும் அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்துள்ளார். நடிகை என்பதையும் தாண்டி இவர் சிறந்த பாடகியாகவும் வலம் வருகின்றார்.


இவ்வாறாக இவர் திரைத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது. இருப்பினும் தொடர்ந்தும் பல படங்களில் நடித்த வண்ணம் தான் இருக்கின்றார். 


ஸ்ருதி ஹாசன் படங்களில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர். அதில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள், வீடியோக்களினைப் பகிர்ந்து வருவார். 


அந்த வகையில் தற்போதும் குடை பிடித்து க்யூட்டான போஸ் கொடுத்து தனது புகைப்படங்களை பகிர்ந்திருக்கின்றார். அதனைப் பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருவதோடு மட்டுமல்லாமல் அப்புகைப்படங்களை வைரலாக்கியும் வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement