• Apr 03 2025

மிட்நைட்டில் விஜய் பார்க்கும் வேலை.. தவெக தொண்டர்கள் அதிர்ச்சி..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் நள்ளிரவு வரை அவர் அரசியல் கட்சி குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’கோட்’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் பகல் முழுவதும் படப்பிடிப்பில் கவனம் செலுத்தும் விஜய், இரவில் தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை எப்படி மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என்ற ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.



இதற்காக அவர் இரவு 11 மணி முதல் நள்ளிரவு வரை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்வதாகவும் மக்களிடம் தனது கட்சியை கொண்டு செல்ல எந்த முறையில் இயங்கலாம்? எப்படி காய் நகர்த்தலாம்? எங்கு மாநாடு நடத்தலாம்? என்னென்ன சமூக சேவைகள் மூலம் மக்களை கவரலாம்? போன்ற ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

திடீரென நள்ளிரவில் விஜய் இடம் இருந்து போன் வந்ததை பார்த்து அதில் இன்ப அதிர்ச்சி அடையும் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு ஆலோசனை கூறி வருவதாகவும் குறிப்பாக முதல் மாநாட்டை எங்கே நடத்த வேண்டும் என்பதை குறித்து ஆலோசனையில் தான் கடந்த சில நாட்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீப காலமாக அரசியல் கட்சி தொடங்கியவர்கள் அனைவரும் மதுரையில் தான் தங்களது முதல் மாநாட்டை நடத்திய நிலையில் விஜய் வித்தியாசமாக நெல்லை அல்லது கோவையில் நடத்தலாம் என்று திட்டமிட்டு இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பகல் முழுவதும் படப்பிடிப்பு, இரவு முழுவதும் கட்சி பணி என விஜய் செம பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement