• Apr 27 2024

கவர்ச்சியில் எல்லை மீறும் ஸ்ரேயா- 40 வயதிலும் குறையாத அழகில் ஜொலிக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம்  அறிமுகமானவர் ஸ்ரேயா. 'மழை', 'கந்தசாமி', 'சிவாஜி', 'குட்டி', 'அழகிய தமிழ் மகன்' என பல படங்களில் நடித்துள்ளார். திரைக்கு வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து கவனம் ஈர்த்தார்.


மேலும் 2018-ம் ஆண்டில் ரஷிய நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரூ கோஷீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ராதா என்ற பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்குப் பிறகும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.


தற்போது 40 வயதை கடந்தாலும் ஸ்ரேயாவின் அழகு குறையாமலேயே இருக்கிறது. இதனால்  சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட எல்லை மீறிய கவர்ச்சி படம் ரசிகர்களையே அதிர்ச்சி அடைய செய்தது. 


ஒரு பக்கம் அவரது அழகை புகழ்ந்து பாராட்டினாலும், மறுபக்கம் 'இந்த வயதில் இதெல்லாம் தேவையா?' என்று ரசிகர்கள் விமர்சிக்கவும் செய்கிறார்கள்.ஆனாலும் ஸ்ரேயா தனது பாதையில் இருந்து பின்வாங்க போவதில்லை என முடிவெடுத்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என மொத்தம் 6 படங்களில் அவர் நடித்தும் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement