• May 04 2024

குறும்பட இயக்குநரான விஜய் மகன்.. வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. அடடே டைட்டில் இதுதானா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். வயதானாலும் உங்க அழகு இன்னும் குறையவே இல்லை என ரசிகர்கள் இன்றுவரை இவரைப் புகழ்ந்து வருகின்றனர். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.


அதாவது ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஸா. இதில் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் படம் இயக்குவது தொடர்பான படிப்பை படித்து வருகிறார். மேலும் தன் மகனுக்கு நடிப்பதில் அவ்வளவிற்கு ஆர்வம் இல்லை என்றும், இயக்கத்தில் ஆர்வம் இருப்பதாகவும் விஜய்யே சமீபத்தில் இடம்பெற்ற பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.


அத்தோடு ஜேசன் சஞ்சய் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடித்துள்ளமை நம் அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமல்லாது சில குறும் படங்களையும் சஞ்சய் இயக்கியுள்ளார்.


இதனையடுத்து தற்போது மீண்டும் ஒரு புதிய குறும் படத்தை தனது நண்பர்களுடன் சேர்ந்து இயக்கி வருகிறார். அந்தவகையில் இந்த குறும்படத்தின் படப்பிடிப்பின் பொது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கூட சில வாரங்களுக்கு முன் இணையத்தில் வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது சஞ்சய் இயக்கி வரும் இந்த குறும் படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் இப்படத்திற்கு 'Pull The Trigger' என தலைப்பு இடப்பட்டுள்ளது.

இதோ அந்த போஸ்டர்..!


Advertisement

Advertisement

Advertisement