• Mar 08 2026

மகாநதி சீரியலில் அதிர்ச்சி திருப்பம்… காவேரி இறந்ததாக விஜய்யை நம்பவைக்கும் பாட்டி.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியல் தற்பொழுது பரபரப்பான திருப்பத்துடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்பொழுது இந்த சீரியலில் இனி நிகழவிருக்கும் எபிசோட்டிற்கான ப்ரோமோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


அதில், விஜய்யோட பாட்டி காவேரி அம்மாவைக் கூப்பிட்டு காவேரி எல்லாத்தையும் மறந்த மாதிரி அவளை இங்க இருந்து கூட்டிட்டு போங்க என்று சொல்லுறார். மேலும், போகும் போது எங்க பேத்தியை மட்டும் கொடுத்திட்டு போங்க என்கிறார். 

அதைக்கேட்டு காவேரி குடும்பத்தில எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பின் வீட்டிற்கு வந்த விஜய் காவேரி எங்க என்று கேட்கிறார். அதைக் கேட்ட பாட்டி எதுவுமே கதைக்காமல் அழுது கொண்டிருக்கிறார். அதனை அடுத்து விஜய் யாராவது என்ன நடந்தது என்று சொல்லுங்க என்கிறார். 

பின் விஜய்யோட சித்தப்பா காவேரி இறந்திட்டால் என்கிறார். அதைக் கேட்ட விஜய் காவேரி.. காவேரி.. என்று சொல்லிக் கத்துறார். அதைக் கேட்ட பாட்டி குழந்தைக்காக நீ நல்ல படியா வாழ வேண்டாமா என்று கேட்கிறார். பின் பெண் குழந்தையைப் பார்த்த விஜய் அழுது கொண்டிருக்கிறார். 

Advertisement

Advertisement