• May 04 2024

காதல் மனைவி கிகிக்கு முத்தமிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சாந்தனு...வைரலாகும் ரொமாண்டிக் புகைப்படம்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

1987-ல் சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், ஒரு நடன குடும்பத்தின் வாரிசு. நடன இயக்குநர்கள், கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டரும் , கீர்த்தியின் அம்மா, காயத்ரி ரகுராமின் அம்மா ஆகியோர் உடன் பிறந்த சகோதரிகள். கீர்த்தியின் அம்மா ஜெயந்தியும் பலராலும் அறியப்பட்ட நடன இயக்குநராவார்.

கீர்த்தியின் உண்மையான பெயர் யோக லட்சுமி. ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் கீர்த்தி. இவர் நடிகர் நடிகர் சாந்தனுவை கடந்த 2015 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து பாக்யராஜ் வீட்டின் மருமகள் ஆனார்.

கிகி என செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார் . இவர் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

கிகிக்கு பிரியாணி தான் பிடித்த உணவாம்,ஷாப்பிங் செய்வதும் மிகவும் பிடித்தமான ஒன்றாகுமாம் ,விஜய்யின் படங்களை மிஸ் பண்ணாமல் பார்த்து விடுவாராம் .அத்துடன் நடனத்திலும் கலக்கி வருகிறார் . 

இன்றைய தினம் அவர் தன்னுடைய பிறந்த நாளினை தனது குடும்பத்தோடு கொண்டாடி வருகிறார்.இவருக்கு பல பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

கிகியின் காதல் கணவர் சாந்தனு மனைவின் பிறந்த நாளுக்கு தன் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை பகிர்ந்து   'நாங்கள் தற்செயலாக சந்திக்கவில்லை இந்தப் பெண்தான் என் எல்லாமே. ❤️இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மனைவி 😘'என வாழ்த்து தெரிவித்துள்ளார் .


Advertisement

Advertisement

Advertisement