• May 07 2024

காசு இல்லாமல் ரோட்டில் படுத்து தூங்கும் சங்கரின் உதவி இயக்குநர்- விஜய்யை வைத்து படம் எடுத்தே தீருவேன் என்று சுற்றி வரும் பரிதாப நிலை

stella / 1 year ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் டாப் இயக்குநராக இருப்பவர் சங்கர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி நடிகர்களையும் வைத்து பிரம்மாண்ட படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் இவருடைய உதவி இயக்குநராக பணி புரிந்த அட்லி உள்ளிட்ட பல இயக்குநர்கள் தற்போது சங்கரை போல் முன்னணி இயக்குநர்களாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இதற்கெல்லாம் எதிர் மாறாக சங்கரின் அசிஸ்டன்ட் ஆக வேலை செய்த இயக்குநர் ஒருவர், தற்போது வாய்ப்பு கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.செல்வேந்திரன் என்பவர் கோவையை சேர்ந்தவர். இவர் 1982ல் சினிமா வாய்ப்பை தேடி சென்னைக்கு வந்தார். நிறைய வாய்ப்புகள் தேடித் திரிந்தார். குறிப்பாக பாரதிராஜாவிடம் உதவியாளராக ஆசைப்பட்டால் அது நடக்கவில்லை. அதன்பின் சங்கரிடம் உதவியாளராக காதலன், இந்தியன், ஜீன்ஸ் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் வேலை செய்துள்ளார்.


இவர் 2009ல் ‘ஒரு காதலன் ஒரு காதலி’ என்ற படத்தில் இயக்கியுள்ளார். அதில் இவர்தான் லட்சுமி ராயை அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அதன் பின் உதவியாளராக முயற்சி செய்யாமல் மீண்டும் படம் எடுப்பேன் என்று வாய்ப்பு தேடி, இன்றுவரை சுற்றி வருகிறார்.ஒருவேளை சாப்பாடு கூட வாங்க காசு இல்லாமல் ரோட்டில் படுத்து தூங்கும் பரிதாப நிலையில் இருக்கிறார். ஊருக்கு போய் குடும்பத்தோடு தங்காமல் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் மீண்டும் நல்ல படம் எடுப்பேன். விஜய்யை வைத்து ஒரு வெற்றி படத்தை இயக்குவேன் என்று கூறிக்கொண்டு சுற்றி வருகிறார்.

சங்கரிடம் உதவியாளராக இருந்து இப்படி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கதையே இல்லாமல் கதையை திருடி அதை மாற்றி எடுத்துவரும் அட்லி போல் இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இப்போது அட்லி கோலிவுட்டில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் ஷாருக்கான் இயக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement