• May 06 2024

குழந்தையாய் இருந்து... ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய சஞ்சீவின் மகள்... வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் சீசன் 5 இல் கலந்து கொண்டு பல ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராகத் திகழ்ந்தவர் நடிகர் சஞ்சீவ். அதுமட்டுமட்டுமல்லாது இவர் விஜய்யின் நெருங்கிய நண்பராகவும் இருக்கின்றார். 


அதாவது சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே சஞ்சீவும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரி கால நண்பர்களான இவர்களின் நட்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதே அன்புடன் சினிமா வரையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

அந்த நட்பின் மூலமாக விஜய்யின் 'புதிய கீதை, நிலாவே வா, பத்ரி, சந்திரலேகா' உள்ளிட்ட படங்களில் அவருடன் இணைந்து நடித்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது 'மெட்டி ஒலி' சீரியலின் வாயிலாக சின்னத்திரை நடிகராக அறிமுகமாகி இருந்தார் சஞ்சீவ். அதனைத் தொடர்ந்து 'திருமதி செல்வம்' சீரியலில் ஹீரோவாக நடித்துப் புகழ் பெற்றார். 

அத்தோடு 'மானாட மயிலாட' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி இருந்த இவரின் அடுக்கடுக்கான பேச்சு பலரையும் கவர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்தும் பல சீரியல்களிலும் நடித்து இருக்கின்றார்.

நடிப்பைத் தாண்டியும் குடும்ப வாழ்க்கையில் இணைந்துள்ள இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு இன்றைய தினம் சஞ்சீவின் மகளின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


அதாவது அதில் அவர் பாவாடை தாவணி க்யூட் ரியாக்ஷன் கொடுத்து இருக்கின்றார். அதுமட்டுமல்லாது "அவரைப் பார்ப்பதற்கு அச்சு அசல் ஹீரோயின் போல் இருக்கிறது" எனவும் கூறி வருகின்றனர் ரசிகர்கள்.

Advertisement

Advertisement

Advertisement