• May 12 2024

ஷாருக்கான்-டாப்ஸி இணைந்து நடிக்கும் புதிய படம்...ஷூட்டிங் எந்த இடத்தில தெரியுமா…இப்பிடி ஒரு பிளான் பண்ணி இருக்காங்களே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். இவருக்கு இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் எண்ணிலடங்காத அளவிற்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு. தொடர் வெற்றிகளினால் உச்சத்தில் இருந்த ஷாருக்கான் திரையுலக பயணத்தில் தோல்வியையும் சந்தித்து இருக்கின்றார். குறிப்பாக 'ரயில், பேன், ஜீரோ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து இவருக்கு தோல்வியைக் கொடுத்திருந்தன.

இந்த நிலையில் இவர் தற்போது 'Dunki ' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கவுள்ளார். இப்படத்தை ஹிந்தி சினிமாவின் பிரபல இயக்குநரான ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். இப்படத்தினுடைய வெள்ளோட்ட படப்பிடிப்புகள் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வாட்டர்லூ பிரிட்ஜில் ஆற்றங்கரையில் இந்த படத்தின் ஷூட்டிங் இடம்பெற்று வருகின்றது. இதனை ஆதாரப்படுத்தும் வகையில் இங்கிலாந்து வாழ் ஷாருக்கான் ரசிகர்களால் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இப்புகைப்படம் ரசிகர்களினால் சோஷியல் மீடியாக்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement