• May 12 2024

"போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகனுக்கு உதவினேன்".. மனம் திறந்து பேசிய பிரபல நடிகை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேனான ரிங்கு சிங் தொடர்ச்சியாக இந்து சிக்ஸர்களை அடித்து விளாசி அணிக்கு அபாரமான வெற்றியை பெற்று கொடுத்தார்.


இந்த அபாரமான வெற்றியினை அடுத்து சந்தோஷத்தின் உச்சத்தில் உள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கான். மேலும் நடிகை ஜூஹி சாவ்லா மற்றும் அவரது கணவர் ஜெய் மேத்தா இருவரும் ஷாருக்கானின் நிறுவனமான ரெட் சில்லிஸ் நிறுவனத்தின் இணை உரிமையாளராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கடந்த 2007ம் ஆண்டு இணைந்து, அதனையடுத்து நடைபெறும் போட்டிகளில் அடிக்கடி ஸ்டாண்டில் அணிகளுக்கு ஊக்கமளித்து வந்தனர்.

ஜூஹி மற்றும் ஷாருக்கான் இருவருக்கும் இடையில் ஒரு உறுதியான நட்பு ஆனது 90களின் முற்பகுதியில் இருந்து தொடர்கிறது. அதுமட்டுமல்லாது தர், யெஸ் பாஸ், டூப்ளிகேட் மற்றும் ஃபிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி என ஈரமான திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பல விடயங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ஜூஹி சாவ்லா. அதாவது "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலென்ஜெர்ஸ் பெங்களூரு அணி இடையேயான ஐபிஎல் போட்டி சமீபத்தில் ஈடன் கார்டனில் நடைபெற்றது. அந்த விளையாட்டு மைதானத்தில் ஷாருக்கான் மற்றும் நான் இணைந்து நடித்த "ஃபிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி"  படத்தின் பாடல் ஒன்று ஒலிக்கப்பட்டது. 

அப்போது நான் உடனே ஷாருக்கிடம் கூறினேன். இப்படி 23 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில் இந்த பிரமாண்டமான அரங்கில் இந்த பாடல் ஒலிக்கப்படும் என நான் கனவிலும் நினைத்ததில்லை என மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்தேன்.  நானும் எஸ்ஆர்கேவும் நீண்ட கால நண்பர்கள் ஆனால் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்த கொள்வது மிகவும் அரிதான ஒரு விஷயம். யாரும் இதை நம்பமாட்டார்கள். ஆனால் எனது கணவர் ஜெய், ஷாருக்குடன் தொடர்பில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்" எனக் கூறியுள்ளார். 


மேலும் "ஷாருக் மகன் ஆர்யன் சமீபத்தில் போதை பொருள் சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கி பின்னர் விடுவிக்கப்பட்டார். அந்த சமயத்தில் ஜாமீன் சம்பந்தமாக 1 லட்சம் ரூபாய் ஒப்பந்த பாத்திரத்தில் நான் கையெழுத்திட்டு இருந்தேன். இது போல ஒன்று நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த தருணத்தில் நான் உதவி செய்வதை சரியென உணர்ந்தேன்" எனவும் அவர் மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement