• Mar 28 2026

விவாகரத்தாகி 3 வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை.. மாப்பிள்ளை யார்?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை நிவேதிதா என்பவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து ஆன நிலையில் தற்போது அவருடைய இரண்டாம் திருமணம் நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

‘மகராசி’ என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்த நிவேதிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில் இருவரும் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு ’திருமகள்’ என்ற சீரியலில் நிவேதிதா நடித்துக் கொண்டிருந்த நிலையில் அதே சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சுரேந்திரன் என்பவரை காதலிப்பதாகவும் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு துணையை கண்டுபிடித்து விட்டதாகவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  நிவேதிதா தெரிவித்து இருந்தார்.

 இந்த நிலையில் சுரேந்திரன் - நிவேதிதா திருமணம் நேற்று நடந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலானதை அடுத்து ரசிகர்கள் இந்த தம்பதிக்கு தங்களுடைய திருமண நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement