சன் டிவி-யில் ஒளிபரப்பான,'கேளடி கண்மணி' சீரியல் மூலம் நாயகியாக அறிமுமானவர் பெங்களூரை சேர்ந்த திவ்யா ஸ்ரீதர். ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு பெண் குழந்தை இவருக்கு திவ்யாவுக்கு இருந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
இவர் கேளடி கண்மணி சீரியலில் கதாநாயகனாக நடித்த அர்னவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இதுகுறித்த புகைப்படங்களை திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமான பின்னரே வெளியிட்டு... தங்களுக்கும் உள்ள உறவு முறை குறித்து ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். இதை தொடர்ந்து ரசிகர்களா பலர் இந்த ஜோடிகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
திவ்யா கர்ப்பமாக இருக்கும் தகவலை கூறிய சில வாரத்திலேயே, அர்னவ் பிரபல சீரியல் நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் புகார் அளித்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு தற்பொழுது இருவருமே பிரிந்து விட்டனர்.திவ்யாவின் வளைகாப்பினையும் சீரியல் குழுவினரே செய்து வைத்தனர்.
அதன் பின் திவ்யா ஸ்ரீதர் சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.இந்த நிலையில் தன்னுடைய குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார்.இந்த நிகழ்வுக்கு சீரியல் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.இது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.அவை வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!