• Apr 27 2024

காதல் மனைவியை கட்டியணைத்து ரொமாண்டிக் போஸ் கொடுத்த செல்வராகவன்-லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் இயக்குநர் செல்வராகவன்.இவர் 2002ம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற படம் மூலம் சினிமாவில் பெரிய பணியை தொடங்கினார்அதன் பிறகு  இவர் தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஓருவன், மயக்கம் என்ன என தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வந்தார்.

இப்போது அவர் கதை எழுதி இயக்கியுள்ள தனுஷ் நடிப்பில் தயாரான நானே வருவேன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. நடிகராகவும் பீஸ்ட், சானி காகிதம், நானே வருவேன் படங்களில் நடித்து வருகிறார்.



அத்தோடு நடிகர் தனுஷின் அண்ணனான இவர் நடிகை சோனியா அகர்வாலை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவரை விவாகரத்து செய்து கொண்டார்.



இதனைத் தொடர்ந்து தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த கீதாஞ்சலியை 2011ஆம்ஆண்டு இரண்டாவது திருமணம் செய்தார்.இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.அதாவது  ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.



இந்நிலையில் தனது காதல் மனைவியை கட்டியணைத்து ரொமாண்டிக்காக புகைப்படம் எடுத்துள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement