• Jan 19 2025

அரசியல் கடலில் மூழ்குவாரா? கரை சேருவாரா? சீமான், ஜெயக்குமார் கருத்து

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

 தளபதி விஜய் கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு தமிழக வெற்றி கழகம் என்ற தனது அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ஒரு பக்கம் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கின்றது. இன்னொரு பக்கம் ஒரு சிலர் நெகட்டிவ்வாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில்  விஜய்யின் அரசியல் வருகை குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 



நாம் தமிழர் கட்சியின் சீமான் இது குறித்து கூறிய போது  ’தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் நன்றாக இருக்கிறது, வரவேற்கிறேன். கட்சியின் பெயரில் திராவிடம் இல்லாதது பெரிய மாறுதல். அவருக்கான வாக்குகள் அவருக்கு கிடைக்கும், எனக்கான வாக்குகள் எனக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். 

'அரசியல் என்பது பெரும் கடல், அதில் நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு, மூழ்கி போனவர்களும் உண்டு, விஜய் கரை சேர போகிறாரா? அல்லது மூழ்க போகிறாரா? என்பதை பார்க்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement