• Apr 30 2024

மே மாதத்தில் மீண்டும் சந்திப்போம்- தென்னாபிரிக்காவில் ஷுட்டிங்கை நிறைவு செய்த இந்தியன் 2 படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர், ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தின் பணிகளை கவனித்து வருகிறார். அந்த வகையில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

பல கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு சமீபத்தில் தைவான் நாட்டிற்கு படக்குழுவினர் சென்றிருந்தனர். அங்கு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதையடுத்து தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஷங்கர், இறுதிக்கட்ட க்ளைமேக்ஸ் காட்சிகளை படமாக்கி வருவதாக கூறப்பட்டது.


இந்த படத்தின் தென் ஆப்ரிக்கா படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் விரைவில் மே மாதம் இப்படத்தின் ஷுட்டிங் ஆரம்பமாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.


மேலும் மே மாத ஷுட்டிங்கில் தான் கிளைமாக்ஸ் ஷுட்டிங்காக இருக்கும் என்றும் ஷங்கர் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement