• May 04 2024

நடிகர் கமல்ஹாசன் இளம் வயதில் எப்படி இருக்கிறார் என்று பாருங்க- வெளியாகிய பிளக் அன்ட் வைட் அன்சீன் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் கமல்ஹாசன் தனது தாயுடன் இளம் வயதில் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.இப்புகைப்படத்தை ரசிகர்கள் ஆச்சரியமாகப் பார்த்து வருவதைக் காணலாம்.

தமிழ் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்கும் முன்னணி நடிகர் தான் கமல்ஹாசன். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தனது அயராத முயற்ச்சியினாலும் இயல்பான நடிப்பினாலும் நடனம் மற்றும் குரலினாலும் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.


நடிப்பதைத் தாண்டி அரசியலிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இதன் மூலம் பல இளம் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய  விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ. 430 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.அதுமட்டுமின்றி 100 நாட்களையும் கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது. 


இந்த நிலையில் இவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் கமல்ஹாசன் . 1954ஆம் ஆண்டு ஸ்ரீநிவாசன் மற்றும் ராஜலக்ஷ்மி எனும் தம்பதிக்கு பிறந்தவர். அந்த வகையில் கமல் தனது தாய் ராஜலக்ஷ்மியுடன் தனது இளம் பருவத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் தமது லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் கமல் நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement