தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நம்ம தளபதி விஜய். இன்று இவரின் பிறந்தநாள் என்பதால் இதனை முன்னிட்டு தளபதி 66வது படமான வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை ரிலீசாகியது. அதில் விஜய் கோட் சூட்டில் ஒரு பெரிய நிறுவனத்தின் பாஸ் போல இருந்தார்.
அந்த போஸ்டர் வைரலாகி ரசிகர்களின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகளின், ஸ்டோரி, ஸ்டேட்டஸ் என தெறிக்க விட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் 2 வது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் காய்கறி வண்டியில் விஜய் மேலே படுத்து இருப்பது போலவும் அருகில் குழந்தைகள் சிலர் அமர்ந்திருப்பது போலவும் செகண்ட் லுக் போஸ்டர் இருக்கிறது.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் உள்ள பேக்ரவுண்ட் ரஜினியின் கபாலி பட போஸ்டர் லுக் போஸ்டரைநினைவுபடுத்துவதாக இருந்தது. ஆனால் இதற்கு ஒரு படி மேலே போய் அந்த பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலே வைத்து இது பிரெஞ்சுபடத்தின் காப்பியா என கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் பிறந்தநாளான இன்று படத்தின் செக்கண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இதுவும் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தின் ஹீரோ என்ரி சீனில் ரஜினி மாட்டு வண்டியில் படுத்தபடி வருவார். அதேபோல்தான் விஜய்யும் மாட்டு வண்டியில் படுத்தபடி வருவதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பேக்கிரவுண்ட் பிரபல கண் மருத்துவமனையாம்-பங்கமாக கலாய்த்து வரும் ரசிகர்கள்
- மீனவன் ஒருவனின் உண்மைக்கதையை படமாக்கிய நடிகர் சரண்ராஜ்
- தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகை குஷ்பூ
- மை டியர் பூதம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு- படத்தின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்
- வெளியானது வாரிசு படத்தின் செக்கன்ட் லுக்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!