• Sep 17 2024

சீன் ஆ.. சீன் ஆ.. பாடலுக்கு அதிதி ஷங்கருடன் குத்தாட்டம் போட்ட சிவகார்த்திகேயன்! வைரல் வீடியோ இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூலை 14ஆம் தேதி ரிலீசாக உள்ள திரைப்படம் 'மாவீரன்'. இந்த படத்தை, தன்னுடைய முதல் படமான மண்டேலா படத்திற்கே தேசிய விருதை வாங்கிய இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, நடிகை அதிதி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில், மிஷ்கின் அரசியல்வாதியாகவும், வில்லனாகவும் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக பழம்பெரும் நடிகை சரிதா நடித்துள்ளார்.



ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம்,  இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட உள்ளது நிலையில், இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. நேற்றுவெளியான , மாவீரன் படத்தின் டிரைலருக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இதுகுறித்த சில வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

அந்த வகையில் நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் வந்த போது, பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்ட வீடியோவும், இப்படத்தில் இடம்பெற்ற சீன் ஆ.. சீன் ஆ...  பாடலுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் இருவரும் மேடையில் குத்தாட்டம் போட்ட டான்ஸ் வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement