• May 04 2024

முதன் முதலாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சாயிஷா... ப்பா அச்சு அசல் அம்மா மாதிரியே இருக்காங்களே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகக் கொடி கட்டிப் பறந்து வந்தவர் நடிகை சாயிஷா. இவர் 'கஜினிகாந்த்' என்ற படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. 

இதனைத் தொடர்ந்து இவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். மேலும் இவர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தங்களுடைய மகளுக்கு Ariana என பெயர் சூட்டியுள்ளனர்.


குழந்தை பிறந்து கிட்டத்தட்ட ஓராண்டுங்களுக்கும் மேல் ஆன நிலையிலும் இதுவரை தங்களுடைய மகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்காமல் இதுவரை காலமும் இருந்து வந்தார்கள்.

இந்நிலையில் தற்போது மகளின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கின்றார் ஆயிஷா. அதாவது ஆர்யா இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.

இதனால் தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து தங்களுடைய மகளை அறிமுகம் செய்கிறோம் என்று கூறி மகளின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் சாயிஷா.



Advertisement

Advertisement

Advertisement