• Jun 23 2024

சிட்டிக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்த சத்யா! மீனாவின் பதிலடியில் மூஞ்சை திருப்பிச் சென்ற விஜயா

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனா காணாமல் போன பஞ்சாயத்தில் ஸ்ருதியும் மீனாவும் மாறி மாறி பேசிக் கொண்டிருக்க, இடையில் மனோஜ் ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் தான் பொய் சொல்றாங்க என சொல்கிறார். ஆனாலும் இறுதியில் ஸ்ருதி சிரித்துக் கொண்டே தான் டப்பிங் பேசிக் கொண்டிருந்த போதுதான் மீனா சொல்லிச் சென்றுள்ளார் என சொல்லி பிரச்சினையை முடிக்கிறார்.

இந்த உண்மை தெரிந்ததும் விஜயாவிடம் சென்ற மீனா, அவருக்கு என் மேல பாசம் இல்லை என்று சொன்னீர்களே, இப்ப பார்த்தீங்களா அவருக்கு என் மேல் பாசம் இருக்கு என புரிந்து கொள்ளுங்க என பதிலடி கொடுக்கிறார். இதனால் விஜயா பேசாமல் ஆப் ஆகி போகின்றார்.

இதை அடுத்து மீனாவும் முத்துவும் மொட்டை மாடியில் உட்கார்ந்து நடந்ததை பற்றி பேசி மாறி மாறி ஊட்டி விட்டு சாப்பிடுகின்றார்கள். இதன் போது சத்யா போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்த விஷயத்தையும் முத்து சொல்லுகிறார்.


மறுநாள் காலையில் அம்மா வீட்டுக்கு சென்ற மீனா அங்கு நடந்தவற்றையெல்லாம் சொல்கிறார். அதன் பின்பு சத்யா வந்ததும் எதற்கு மாமா மேல் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்த என்று திட்டுகிறார்.

மேலும், நீ என்ன எங்க எல்லாம் தேடினா என்று கேட்க, லேட் ஆகிட்டு அதனால நான் நேரா ஸ்டேஷனுக்கு தான் போனேன் என்று சத்யா சொல்ல, ஆனால் உங்க மாமா நான் பூ கொடுக்கிற எல்லா இடத்துக்கும் போய் என்ன தேடி அலைஞ்சு இருக்காரு.  இதெல்லாம் நீ தான் பண்ண மாதிரி தெரியலைய.. யார் சொல்லி பண்ண என்று கேட்க, சிட்டி தான் சொன்னார் என உண்மையை உடைக்கிறார் சத்யா. இதனால் அவன் நல்லவன் இல்லை என்று உனக்கு ஒருநாள் புரியவரும் என எச்சரித்து செல்கிறார் மீனா.

இறுதியாக சிட்டியை பார்க்க சென்ற சத்யா இனிமேல் மாமா விஷயத்தில் தலையிட வேண்டாம். அவர் என்ட விஷயத்தில தலையிடாமல் அமைதியாக இருக்காரு. நாமத்தான்  அவரை தேடி  பிரச்சினை பண்ணுகிறோம் தப்பு நம்ம மேல தான் என்று சொல்லி சிட்டிக்கு ஷாக் கொடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement