• May 01 2024

பக்கத்து றூம் கதவைத் தட்டிய சதீஷ்... உள்ளே இருந்து வெளியே வந்த நபர்... பின்பு நடந்தது என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் சதீஷ். இவர் ‘கொலை கொலையா முந்திரிக்கா’ என்ற படத்தின் மூலம் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.


தன்னுடைய அறிமுகப் படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பினால், நகைச்சுவைப் பாணியினாலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கவர்ந்து விட்டார். இதனால் தொடர்ந்தும் பல படவாய்ப்புகள் இவருக்கு வந்து குவியத் தொடங்கின.

அந்தவகையில் 'மெரினா, தமிழ் படம், மதராச பட்டணம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி, மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், கலகலப்பு-2, சிக்ஸர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


இவ்வாறாக படங்களில் பிஸியாக நடித்து வந்த சதீஷ், சிந்து என்பவரை 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து குடும்ப பந்தத்தில் இணைந்து கொண்டார். இவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. 

திருமணத்தை தொடர்ந்தும் நடிகர் சதீஷ் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். அதுமட்டுமல்லாது காமெடி ரேஞ்சுக்கு இருந்தவர் தற்போது ஹீரோவாகவும் வளர்ந்திருக்கின்றார்.


இவர் எந்த புகைப்படத்தையாவது வெளியிட்டாலும் சரி, வீடியோவைப் பகிர்ந்தாலும் சரி அது உடனே ரசிகர்கள் மத்தியில் வைரலாகி விடுவது வழமை.

அந்தவகையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றினை பகிர்ந்திருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றார்கள்.


அதாவது இவர் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கின்றார். அங்கு தன்னுடைய றூமிற்கு பக்கத்தில் உள்ள றூம் கதவை தட்டுகின்றார். தட்டி விட்டு தன்னுடைய றூமில் சென்று ஒழிகின்றார்.

இவர் தட்டிய ரூமினுள் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்து ஏமாற்றமடைகின்றார்கள். இதேபோன்று மற்ற றூம் கதவையும் தட்டி விட்டு ஒழிகின்றார். இதுவே அந்த வீடியோவில் பதிவாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement