• Sep 17 2024

இயக்குநரையே இயக்கப் போகும் சசிகுமார்.. வெளியானது குட்நியூஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'சுப்ரமணியபுரம்' படம் மூலம் இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட கலைஞராக திரையுலகிற்கு அறிமுகமானவர் சசிகுமார். இதனையடுத்து மேலும் ஒரு சில படங்களை இயக்கி வந்த சசிகுமார் 'ஈசன்' படத்திற்கு பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை. 


ஏனெனில் சினிமாவில் தொடர்ச்சியாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும் படங்களை இயக்கவுள்ளதாக இவர் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாது இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் கூறியிருந்தார். 


இதனையடுத்து தற்போது சசிகுமார் இயக்கவுள்ள புது படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப்பை வைத்து சசிகுமார் படம் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 


மேலும் இப்படம் வரலாற்று பின்னணியில் உருவாவதாகவும் முதற்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் வருகிற ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாககவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Advertisement

Advertisement