• Apr 26 2024

சரத்குமாரின் 60-வது பிறந்தநாள் நிகழ்வில் மகள் ராயனி ஹார்டி கொடுத்த சர்ப்ரைஸ்- அடடே 8 வருடங்களுக்கு முதல் நடந்திருச்சா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி பிரபல நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இவர் நடித்த சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக உள்ளிட்ட படங்கள் எவர்க்ரீன் க்ளாசிக் படங்களாக கொண்டாடப்படுகின்றனஅண்மையில் இவர் வானம் கொட்டட்டும், பொன்னியின் செல்வன், வாரிசு ஆகிய படங்களில்  நடித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் சரத்குமார், பெரிய பழுவேட்டரையராக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.


தற்போது தி ஸ்மைல் மேன், பரம்பொருள் & நிறங்கள் மூன்று ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும், பொறுப்புகளைக் கொண்டிருக்கும் சரத்குமார் நடிகர் சங்கத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறார். மேலும் தென்காசி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.


மேலும் நடிகையாக வலம் வந்த ராதிகா சரத்குமாரை நடிகர் சரத்குமார் திருமணம் செய்து கொண்டார். ராதிகா சரத்குமார், சமீபத்தில் ரன் பேபி ரன் படத்தில் நடித்திருந்தார். தற்போது சந்திரமுகி 2 மற்றும் மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை தொடர்களிலும் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார்.


இந்நிலையில், சரத்குமாரின் 60-வது பிறந்தநாள் நிகழ்வில் நடந்த ராதிகா & சரத்குமாரின் அறுபதாம் கல்யாண Throwback புகைப்படங்களை மகள் ராயனி ஹார்டி  வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 8 வருடங்களுக்கு முன் ராதிகா & சரத்குமாரின் அறுபதாம் கல்யாணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement