• May 05 2024

சரத்குமார் வீட்டில் இன்று நடக்கவுள்ள விசேஷம்... வாழ்த்து மழையில் நனையும் மகள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் ரசிகர்கள் பலரின் மனங்கவர்ந்த நாயகனாக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் முதலில் தயாரிப்பாளராகவும், வில்லனாகவும் அறிமுகமாகி அதன் பின்னரே கதாநாயகனாக ஜொலித்தவர்.


எத்தனை வருடங்கள் கடந்து விட்டாலும் தற்போதும் இவர் பல படங்களிலும் நடித்துக் கொண்டே தான் இருக்கின்றார். அதாவது  ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலிலும் நடித்து அசத்தி வருகிறார்.


இந்நிலையில் நடிகர் சரத்குமாரின் குடும்ப வாழ்க்கையினை எடுத்து நோக்குவோமாயின், இவருக்கு வரலட்சுமி, பூஜா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான வரலட்சுமியை தெரியாதவர்கள் என்று யாருமே இல்லை. இவர் சினிமா இன்டஸ்ரியில் கொடி கட்டிப் பறந்து வருகின்றார். 


இந்நிலையில் சரத்குமாரின் இளையமகளான பூஜா இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இதற்கு திரைப்பிரபலங்கள் உட்படப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்ற நிலையில் அவரது தந்தையான சரத்குமாரும் க்யூட்டான வீடியோ ஒன்றின் ஊடாக மகளிற்கு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கின்றார். 


அதே போன்றே அக்கா வரலட்சுமியும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பூஜாவின் சிறுவயதுப் புகைப்படங்கள் தொடக்கம் இன்றுவரையான புகைப்படங்கள் பலவற்றையும் இட்டு தன்னுடைய தங்கைக்கு சப்ரைஸ் கொடுத்திருக்கின்றார்.


Advertisement

Advertisement

Advertisement