• Mar 28 2023

மேடையில் அசிங்கப்படுத்திய தொகுப்பாளினி..மறைமுகமாக மிரட்டிய சரத்குமார்..!

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

90காலகட்டத்தில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்து முக்கிய நடிகராக திகழ்ந்தவர் தான் சரத்குமார்.இவர் தற்போது   குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அவரின் மகள் வரலட்சுமி நடித்த கொன்றால் பாவம் என்ற படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

அப்போது சரத்குமாரை வரவேற்ற தொகுப்பாளினி கவிதா, நக்மா முதல் நமீதாவை அன்பால் நனைத்த என்று ஆரம்பித்து கலாய்த்தபடி சொல்லியிருந்தார்.


இதன்பின்னர் பேசிய சரத்குமார், நக்மா, நமீதா மட்டும் கூறிவிட்டு மற்ற நடிகைகளை கூறாமல் இருந்தால் கோச்சிக்க போறாங்க என்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியை கொடுத்த கவிதாவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு  பேசிய கவீதா, சரத்குமாரின் பாடல் அப்படி என்றும் நமீதாவுடன் அந்த பாடலுக்கு ஆடியது எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள், அதனால் தான் அப்படி கூறினேன் என்று பகிர்ந்துள்ளது தற்போது வைரலாகி வருகின்றது.


அதன்பின்னர்  நிகழ்ச்சி முடிந்த பின் அவங்களை பார்த்துக்கொள்கிறேன் என்று கவிதாவை மறைமுகமாகவும் மிரட்டியிருக்கிறார் சரத்குமார்.


Advertisement

Advertisement

Advertisement