• Apr 01 2023

கார்த்திக் தன்னுடைய அப்பா இல்லை என்ற உண்மையை அறிந்த ஸ்ருதி- இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் மௌனராகம் சீரியல்

stella / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பலரின் மனம் கவர்ந்த தொடராக இருப்பது மௌன ராகம் சீசன் 2 . இந்தத் தொடரை மக்கள் விரும்பி பார்ப்பதற்கு முக்கிய காரணம் என்றால் ஏதாவது ஒரு திருப்பம் என்றால் அதை உடனடியாக உடைத்து விட்டு கதை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்று விடும்.

 ஒரே இடத்தில் தேய்ந்த ரெகார்ட் போன இல்லாமல் கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர். தற்போது கதைப்படி கோவிலுக்கு வைத்திருந்த நகைகளை ஸ்ருதி திருடி விடுகிறார். அதை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய சக்தி மீது மாமியார் கோபத்துடன் இருக்கிறார்.


 இதை எப்படியாவது கண்டுபிடித்து மீண்டும் நகைகளை கோவிலில் சேர்த்து விட்டு சக்தி மீது இருக்கும் பழியை துடைத்து விட வேண்டும் என சக்தியின் கணவர் வருண் நினைத்து கொண்டிருக்கிறார். தற்போது கதைப்படி அவர் நகைகளை திருடியவரை கையும் களவுமாக பிடித்து நகைகளை மீட்டுக் கொண்டு வந்து விட்டார்.

அத்தோடு ஸ்ருதியையும் தருண் வீட்டை விட்டு அனுப்பி விட்டார்.வீட்டை விட்டு சென்றாலும் சக்தியை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் ஸ்ருதியிடம் கார்த்திக் உன்னுடைய அப்பா இல்லை என சக்தியின் அத்தை சொர்ணம் சொல்லி விடுகின்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ருதி காதாம்பரியிடம் சென்று கேட்கின்றார். இது குறித்த ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement