தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படமும், அவரது மனைவி ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படமும் வரும் பிப்ரவரி 27ம் தேதிஅன்று ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகின்றன.
இது தொடர்பில் சரத்குமார் கொடுத்த பேட்டி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. அதன்படி அவர் கூறுகையில், ஆரம்பத்தில் ஆழி படம் பிப்ரவரி 20-ம் தேதி வெளியாக இருந்தது, ஆனா அதே நாளில் ‘தாய் கிழவி’ படம் ரிலீஸ் ஆக இருந்தது.
அதனால் எனது படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு வாரம் தள்ளிவைக்க தயாரிப்பாளரிடம் கேட்டேன். அதற்கு பிறகு தற்செயலாக ‘தாய் கிழவி’ படமும் பிப்ரவரி 27-க்கு தள்ளிப்போனதால், இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் சூழல் உருவாகிவிட்டது.
ஆனலும், என் மனைவியின் படம் வெற்றி பெற்றால், அது எனக்கே கிடைத்த வெற்றிதான் என நெகிழ்ச்சியுடன் சரத்குமார் கூறினார்.

மேலும், ‘தாய் கிழவி’ படம் 100 நாட்கள் ஓட வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு முன் 1994-ம் ஆண்டு தனது இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகி இரண்டும் 100 நாட்கள் ஓடிய நினைவையும் அவர் பகிர்ந்தார்.
அத்துடன் தாய் கிழவி என்ற டைட்டில் ராதிகாவுக்கு மேலும் பிரபலத்தை கொடுத்ததாகவும், தான் காலையில் தாய் கிழவி என்று அழைத்து தான் கிண்டல் பண்ணுவதாகவும் தெரிவித்தார்.
Listen News!