• May 06 2024

சரத்பாபு உயிரிழப்பு - முதல் மனைவியின் இப்போதைய நிலைமை என்ன தெரியுமா?

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

தெலுங்கில் ராமராஜ்யம் படத்தின் நடிகராக அறிமுகமான சரத்பாபுவுக்கு தமிழ் சினிமா பெரிய அடையாளத்தை கொடுத்தது. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய பட்டண பிரவேசம் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான சரத்பாபு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400 படங்கள்வரை நடித்திருக்கிறார்.

சரத்பாபு கடைசியாக தமிழில் வசந்தமுல்லை படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் திரையுலகில் இருந்து  ஒதுங்கிய அவர் ஓய்வில் இருந்தார். ஆனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக முதலில் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் ஹைதராபாத்தில் இருக்கும் ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்துவந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக சரத்பாபு உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதனை அவரது குடும்பத்தினர் மறுத்தனர். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த அவர் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 72. ஹைதராபாத்தில் இருக்கும் அவரது உடல் சென்னை தி.நகரில் இருக்கும் அவர் வீட்டுக்கு எடுத்து வரப்படும் என்றும், சென்னையில்தான் அவரது இறுதிச்சடங்கு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

சரத்பாபு முதலில் ரமா பிரபா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த திருமணம் விவாகரத்தில் முடிய தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான எம்.என்.நம்பியாரின் மகளான சினேகாவை திருமணம் செய்துகொண்டார். சினேகாவுடனான திருமண வாழ்க்கையும் பாதியில் முடிந்தது.

 சரத்பாபுவின் முதல் மனைவி ரமா பிரபா ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். அதன் பின்னர்  ஊட்டியில் வளர்ந்த அவர் வறுமையின் காரணமாக சென்னைக்கு வந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அத்தோடு அவரது நடிப்பு திறமை சினிமாவுக்கான கதவுகளை திறக்க தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் சிறந்த நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி க்ரூப் டான்ஸராகவும் இருந்தார்.

 தமிழில் மெகா ஹிட்டான உத்தரவின்றி உள்ளே வா படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கிய ரமா; சரத்பாபுவை வைத்து அந்தப் படத்தை தெலுங்கில் தயாரித்தார். ஆனால் எதிர்பார்த்தபடி படம் ஹிட்டாகவில்லை. மாறாக பெருத்த நஷ்டம் அவருக்கு ஏற்பட்டது. சம்பாதித்த மொத்த பணத்தையும் அதில் இழந்தார். மேலும் அப்படிப்பட்ட சூழலில் ரமா பிரபாவுக்கு துணையாக இருந்தது சரத்பாபு. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.

 சரத்பாபுவைவிட ஐந்து வயது மூத்தவரான ரமா பிரபாவை பத்திரிகைகள் கடுமையான விமர்சித்தன. ஆனால் அதைப் பற்றி இரண்டு பேரும் கவலை கொள்ளாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆனால் 14 வருடங்கள் கழித்து அவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. எனினும் இதனையடுத்து அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் செட்டில் ஆகிவிட்டார் ரமா பிரபா.

சென்னையில் இருந்து ஆந்திரா செல்வதற்கு பணம் இல்லாததால் ரஜினியை சந்திக்க சென்றார் ரமா. அப்போது அவரது நிலையை பார்த்து கண் கலங்கிய ரஜினி, உடனடியாக 40,000 ரூபாய் பணம் கொடுத்து உதவினார். அதனை எடுத்துக்கொண்டு அனந்தபுரம் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் வீடு கட்டி செட்டிலாகிவிட்டார்.

இந்த சமயத்தில் குடி பழக்கத்திற்கும் அடிமையானார். ஆனால் நாகேஸ்வரராவ் தனது தங்கையாய் நினைத்து ரமாவை அதிலிருந்து மீட்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார். ஒருகட்டத்தில் நடிப்பிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கியுவிட்டார்.

பின்னர் நாகார்ஜுன் மணி ஆர்டர் அனுப்பி உதவிகொண்டிருந்தார். இருப்பினும் வெளி தொடர்புகள் அனைத்தையும் அறுத்துவிட்டார் ரமாபிரபா. 2000 வாக்கில் ரம்யா கிருஷ்ணனின் கணவரும், இயக்குநருமான கிருஷ்ணன் வம்சி தேடிப்பிடித்து ரமாவை ஒரு படத்தில் நடிக்க வைத்தார். அந்தப் படத்தில் நடித்து மீண்டும் பெயர் பெற்ற ரமா; பூரி ஜெகன்னநாத் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்படியாக நடித்தவர் வயது மூப்பு காரணமாக இப்போது தனிமையில் அனந்தபுரம் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசித்துவருகிறார்.

சரத்பாபுவை விட்டு பிரிந்தாலும் அவர் மீதான ரமாவின் காதல் கடைசி வரை குறையவில்லை என்றே கூறப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சரத்பாபுவை நினைத்து ரொம்பவே அழுது தீர்த்தாராம் ரமா பிரபா. இருப்பினும் நேரில் சென்று அவரை பார்ப்பதற்கு ஏதோ ஒரு காரணம் அவரை தடுத்திருப்பதாகவும் பேசப்படுகிறது. இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்துகொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement