• May 19 2024

கிழிந்த அரை டவுசருடன் பொது இடத்திற்கு வந்த சாரா... இப்படியும் ஒரு கவர்ச்சியா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் சிறந்த பெண் பிரபலங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சாரா அலிகான். இவர் தனுஷ் மற்றும் அக்ஷய்குமார் நடித்த 'அந்தரங்கி ரே' என்னும் படத்தில் நாயகியாக நடித்து அசத்தியிருந்தார். இதில் இவரது நடிப்பிற்கு பிரபலங்கள் மட்டுமன்றி ரசிகர்கள் பலரும் வெகுவான பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.


எனினும் இதற்கு முன்னதாக இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு 'கேதார்நாத்' என்னும் நகைச்சுவை திரைப்படத்திலும் மூலம் நடிகையாக தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப் படமும் வணிகரீதியாக  வெற்றியினையே அள்ளிக் குவித்திருந்தது.


தன்னுடைய அறிமுகப் படத்திலேயே சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்ற இளம் நடிகையான இவர் ஒரு சில படங்களின் வாயிலாக தொடர் தோல்விகளையும் சந்தித்திருந்தார். எனினும் 'அட்ராங்கி ரே' மூலம் மீளவும் பாராட்டுகளைப் பெற்றார் .


ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் சாரா அலி கான் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவே இன்றுவரை இருக்கிறார். அத்தோடு ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 2019-ஆம் ஆண்டின் 100 பிரபலங்கள் பட்டியலில்  இவரும் ஒருவராக இடம் பிடித்து இருந்தார்.


திரைப்படங்களில் மட்டுமன்றி விளம்பர படங்களிலும் அடிக்கடி தோன்றும் இவர் 'ஃபேன்டா , பூமா , மற்றும் வீட்' உட்பட பல பிராண்டுகளின் விளம்பரங்களிலும் நடித்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது தற்போது லக்ஷ்மன் உடேகரின்புதிய படம், கேஸ்லைட் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் சாரா அலிகான். 


இவர் எப்போதுமே கவர்ச்சியான உடைகளின் மீது அதிகளவிலான மோகம் கொண்டவர். அடிக்கடி கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழமை. அந்தவகையில் மிகவும் குட்டையான அரை டவுசருடன் பொது இடத்திற்கு வந்த சாரா அலிகானின் கவர்ச்சிப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement