• May 19 2024

ஹனிமூனால் பெரிய பிரச்சினையில் சிக்கிய விக்கி... உடன் இந்தியா திரும்பத் தீர்மானம்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது எச் வினோத் கூட்டணியில் 'வலிமை' படத்திற்கு பிறகு ஏ'கே 61' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன. 

இப்படத்தினைத் தொடர்ந்து விரைவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் 'ஏகே 62' படத்திலும் நடிக்கவிருக்கின்றார் நம்ம தல. எனினும் இப்படத்திற்காக விக்னேஷ் சிவன் என்ன வேலை ஆரம்பித்துள்ளார் என்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியான ஒன்றாக இருந்து வருகிறது.


இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவனுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது 'ஏகே 62' படத்தினைப் பற்றி துளி அளவு கூட கவலைப்படாமல் தன்னுடைய காதல் மனைவி நயன்தாராவுடன் ஒரு மாத காலமாக இரண்டாம் ஹனிமூனில் ஜாலியாக இருக்கின்றாராம்.

அத்தோடு இவர் ஸ்பெயின் நாட்டை சுற்றியுள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று அங்கு ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இதனால் கோபமடைந்த 'ஏகே 62' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா சீக்கிரம் படத்தின் முழு கதையையும் சொல்ல வேண்டும் என்று விக்னேஷ் சிவனை நிர்ப்பந்தத்தில் ஆழ்த்தியுள்ளார்களாம்.


அத்தோடு ஏற்கனவே 'என் ஜி கே, காத்து வாக்குல ரெண்டு காதல்' படங்கள் ஓரளவு பெற்றி பெற்ற நிலையில் இப்படியொரு கண்டீசனை அவருக்கு போட்டிருக்கிறார்கள் லைக்கா நிறுவனம். இதனால் ஹனிமூனில் உள்ள விக்னேஷ் சிவன் கூடிய சீக்கிரமே இந்தியா வந்து பட வேலைகளை ஆரம்பிக்கவுள்ளாராம். அதுமட்டுமல்லாது நயன்தாராவும் மிச்சமிருக்கிற 'ஜவான்' படப்பிடிப்பு மற்றும் 'ஏகே 62' படப்பிடிப்புக்களில் கலந்து கொள்ள இருக்கின்றாராம்.

Advertisement

Advertisement