• May 04 2024

கவுண்டமணி டைட்டில்...சந்தானத்தின் புதிய படம்...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் கௌதம் மேனன் அவர்கள் இப்பொழுது நடிகராகவும் வலம் வந்துகொண்டு இருக்கிறார். இவர் மேகா ஆகாஷ் என்ற நடிகையை அறிமுகம் செய்தார். இந்த நடிகை தமிழ் படங்களில் அதிகம் நடித்திருக்கிறார்.


இவர் மக்கள் மத்தியில் பிரபலமாவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இவரின் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்தது. ஏனென்றால் இவர் கதைக்கருவை பார்க்காமல் யார் கூப்பிட்டாலும் போய் நடித்திருந்தார். இதனால் இவரின் படங்கள் தோல்வியடைந்தது.


இவர் தோல்வியே பார்த்ததால் கொஞ்ச காலமாக சினிமாவில் காணவில்லை. இப்போது திரும்பவும் தமிழ் சினிமாவில் கால் பதிக்க வேண்டும் என்று நினைத்து எந்த ஹீரோவாக இருந்தாலும் பரவாயில்லை நான் நடிக்கிறேன் என்று மேனேயரிடம் கூறியிருந்தார்.


சமீபத்தில் மேகா சந்தானத்துடன் இணைந்துள்ளார். கவுண்டமணியின் காமெடி டைட்டில் பெயரான வடக்கு பட்டி ராமசாமி என்ற படத்தில் இவர்கள் நடித்து வருகிறார்கள். யாரின் நல்ல காலமோ தெரியவில்லை இந்த படத்தின் பின்னர் மேகாவிற்கு 5 படங்கள் காத்திருக்கிறது. சந்தானத்தின் படங்களும் தோல்வியை பார்த்தது தான். சந்தானம் காமெடியில் வின் பண்ணின அளவிற்கு கதாநாயகனாக வின் பண்ண முடியவில்லை.


Advertisement

Advertisement

Advertisement