• May 04 2024

வெளியானது சந்தானத்தின் 'டிடி ரிட்டன்ஸ்' பட டிரைலர்... சிரிக்க வைத்த மாஸ் வீடியோ இதோ..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராகத் திகழ்ந்து வந்த சந்தானம் சமீபகாலமாக கதாநாயகனாகவும் நடித்து வருகின்றார். அந்தவகையில் தற்போது இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். 


அத்தோடு ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார். 

இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்நிலையில் இப்படத்தினுடைய இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற ஜூலை 28-ஆம் தேதி திரைக்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement