• Jan 19 2025

கோபி பேச்சைக் கேட்டு ஈஸ்வரி எடுத்த விபரீத முடிவு! கமலா ராதிகாவுக்கு பேரதிர்ச்சி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரி ஹாஸ்பிடலில் இருக்க, ரிப்போர்ட் எல்லாம் வந்துடுச்சு பெருசா பிரச்சனை ஒன்னும் இல்ல ஆனா இன்னைக்கு ஒரு நாள் இங்கே இருக்கட்டும் என்று டாக்டர் சொல்லுகிறார். இதனால் செழியனும்  பாக்யாவும் ஹாஸ்பிடல் தங்க, எழிலும் ராம்மூர்த்தியும் வீட்டுக்கு செல்கின்றார்கள். கோபியும் ஹாஸ்பிடலில் தங்குகிறார்.

ஈஸ்வரியை பாக்கியா நைட் எல்லாம் கண் முழித்து பார்க்க, காபி வாங்கி கொடுக்கிறார் கோபி. மறுநாள் ராமமூர்த்தி வந்து ஈஸ்வரியை நம்மோடு கூட்டிட்டு போயிடலாம் என்று சொல்ல, அம்மாவ நான் தான் கூட்டிட்டு போவேன். அவங்கள நல்லபடியாக பார்த்திருப்பேன் என்று கோபி சொல்லுகிறார்.

இதைக் கேட்ட ராமமூர்த்தி எனக்கு ஸ்டாக் வர நீ தான் காரணம். இப்ப ஈஸ்வரி இங்க படுக்கவும் நீதான் காரணம். நீ பார்த்துக்க தேவையில்லை என்று சொல்கிறார்.


ஆனாலும் உள்ளே வந்த கோபி, அம்மா நீங்க என்கூட தான் வரணும் நீங்க இல்லாட்டி நான் வாழ முடியாது என கலங்குகிறார். இதனால் பாக்கியா, ராமமூர்த்தி, செழியன் உள்ளே சென்று ஈஸ்வரியை கூப்பிட நான் இப்போ வந்துட்டா கோபி ரொம்ப வருத்தப்படுவான், அவன் என்ன நல்லபடியா பாத்துக்குவான். இனிமே நான் மூன்று வேலை ஒழுங்கா சாப்பிடுவேன் என்று கோபியுடன் கிளம்பி செல்கிறார்.

மறுபக்கம் கோபி ஈஸ்வரியின் பேச்சைக் கேட்டு தன்னிடம் நடந்து கொள்வதை நினைத்து ராதிகா கண்கலங்க, நீ ஒன்னும் கவலைப்படாத அந்த அம்மா ஆஸ்பத்திரி போனதும் நல்லது தான். அப்படியே பாக்கியா வீட்டார்கள் அவரை கூட்டிட்டு போயிருவாங்க நீயும் மாப்பிள்ளையும் சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க பெல் சத்தம் கேட்கின்றது.

இதனால் யார் என போய் பார்த்தால் ஈஸ்வரி கோபியுடன் வந்து நிற்கின்றார். இதை பார்த்து கமலாவும் ராதிகாவும் அதிர்ச்சி அடைகின்றார்கள். இதுதான் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

Advertisement

Advertisement