• Sep 17 2024

தீ தளபதி பாடலின் ஷுட்டிங் தளத்திலிருந்து சாண்டி மாஸ்டர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ- யாரெல்லாம் இருக்கிறாங்க என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒருமாதமே எஞ்சியுள்ள நிலையில், வாரிசு படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

குறிப்பாக கடந்த மாதம் இப்படத்திலிருந்து ரஞ்சிதமே என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.விஜய் மற்றும் மானசி இணைந்து பாடிய இப்பாடல் வெளியான உடனே வைரல் ஹிட் ஆனது. தமன் இசையில் வெளியான இப்பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.


இதனை அடுத்து நேற்றைய தினம் நடிகர் சிம்பு பாடியிருக்கும் தளபதி தீ பாடல் வெளியாகியிருந்தது. பாடலசிரியர் விவேக் வரிகளில் உருவான இப்படலுக்கு நாண்டி மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். தமனின் இசையில் சிம்புவின் தெறிக்கும் குரலில் வெளியாகி இருக்கும் தீ தளபதி பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில் இப்பாடலின் ப்ரமோஷன் காட்சிகளில் நடிகர் சிம்புவும் சாண்டி மாஸ்டர் மாத்திரமே நடனம் ஆடியிருந்தனர். எனவே இப்பாடலின் படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த புகைப்படத்தை சாண்டி மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதைக் காணலாம்.

Advertisement

Advertisement