• May 29 2023

சமந்தாவை பிரிந்தது இதற்கு தான்...எல்லாத்துக்கும் அவர் தான் காரணமா..? முதன்முறை மனம் திறந்த நாக சைதன்யா

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

திரையுலகில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகை சமந்தா.இவரும் நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின் இருவரும் கடந்த 2021ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்து இருந்தனர்.

அப்போது முதல் இருவரும் விவாகரத்துப் பெற்று தனித்தனியாக தான் வசித்து வருகின்றனர். ஆனாலும், நாக சைதன்யா - சமந்தா பிரிவுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. அத்தோடு இருவரும் தாங்கள் பிரிந்ததற்கான காரணத்தை வெளியே கூறியதில்லை.

மேலும் இந்த சூழலில் நாக சைதன்யா நடித்துள்ள கஸ்டடி திரைப்படம் மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. இதனையடுத்து கஸ்டடி படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் நாக சைதன்யா கலந்துகொண்டார்.எனினும் அப்போது சமந்தாவை பிரிந்ததற்கான காரணத்தை நாக சைதன்யா மனம் திறந்துள்ளார்.

முதன்முறையாக இதுகுறித்து பேசிய நாக சைதன்யா, சமந்தா எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் நான் விரும்பினேன். அத்தோடு நாங்கள் பிரிந்து 2 வருடங்களும், சட்டப்படி விவாகரத்துப் பெற்று ஒரு வருடம் ஆகிவிட்டது. சமந்தா மிகவும் நல்ல பெண் தான், ஆனால் சமூக வலைதளங்களில் வந்த போலியான செய்திகள் தான் நாங்கள் பிரிய காரணமானது.

முதலில் வந்த போலியான செய்திகள் பற்றி நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அதுவே பின்னர் பெரிய பிரச்சினையாக மாறி நாங்கள் பிரிய காரணமாகிவிட்டது. அதேநேரம் பிரிந்து விட்டாலும் இப்போதும் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் மரியாதையுடன் தான் இருக்கிறோம். ஆனால் சில ஊடகங்கள் தான் நாங்கள் மரியாதை இல்லாமல் நடந்து கொள்வதாக தவறாக சித்தரிக்கின்றன என்றுள்ளார்.

அத்தோடு எங்களின் கடந்த காலத்தில் கொஞ்சம்கூட சம்பந்தமில்லாத மூன்றாவது நபரை இதற்குள் இழுத்து அவமரியாதை செய்தனர். மேலும் இது எங்களுக்குள் மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. என்ன நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்கிறேன். ஆனாலும் இப்போது நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன் என்றுள்ளார். நாக சைதன்யா குறிப்பிட்ட அந்த மூன்றாம் நபர் யார் என இப்போது ரசிகர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக பிரிய வேண்டுமென முடிவு செய்துவிட்டால் அதற்கு பிறகு நட்பு எதற்கு? இது என்னை மிகவும் எரிச்சல் அடையை செய்கிறது என நாக சைதன்யா கூறியிருந்தார். சமந்தாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்க மிகவும் காட்டமாக நாக சைதன்யா பேசியது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும் தற்போது முதன்முறையாக சமந்தாவை விவாகரத்து செய்தது ஏன் எனவும் நாக சைதன்யா மனம் திறந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement