• Oct 16 2024

அடிக்கடி வித்தியாசமான உணவை உண்ணும் சாய் பல்லவி- இவ்வளவு பற்றுக் கொண்டவரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகியவர் தான் சாய்பல்லவி. இவர் இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான பிரேமம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இதனை அடுத்து இவருக்கு படவாய்ப்புக்கள் குவியத் தொடங்கியது. இதனை அடுத்து தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி திரைப்படத்திலும் சூர்யாவுடன் என்ஜிகே திரைப்படத்திலும் நடித்திருந்தார்.தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திலும் நடித்து வருகின்றார்


அத்தோடு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் சிறந்த நடிகையாக விளங்கிவரும் இவர்  கடந்த 2008ம் ஆண்டு வெளியான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா? என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றவர்.

கடந்த சில காலங்களாக ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டு வரும் சாய் பல்லவி ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தன்னிடம் உள்ள ஒரு வினோதமான உணவு பழக்கத்தை பற்றி கூறியிருக்கிறார். 


சாய்பல்லவி தான் அடிக்கடி விபூதி உண்ணும் பழக்கம் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார், தனது கை பையில் எப்பொழுதும் விபூதி இருக்கும் என்றும், அதை உண்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். தான் உண்பது ஒரு விசேஷமான மரத்திலிருந்து செய்யப்பட்ட விபூதி என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை விபூதி உண்பது பல இடங்களில் உள்ள இயல்பான பழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement