கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் "ரெட்ரோ " திரைப்படம் வருகின்ற மே மாதம் முதலாம் தேதி வெளியாகவுள்ளது.இப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெட்ஜ் நடித்துள்ளார். 65 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப் படத்தினை சூர்யா ஜோதிகாவின் 2d நிறுவனம் தயாரித்துள்ளதுடன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதிலும் சமீபத்தில் வெளியாகிய "கனிமா " பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரலாகியது. படத்தின் மூன்றாவது பாடல் சில மணி நேரத்திற்கு முன்னர் வெளியாகியுள்ளது.
இப் பாடல் வெளியாகி ஒரு சில மணித்தியாலங்களில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழாவினை நேரு ஸ்டேடியத்தில் வைப்பதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது. இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Listen News!