• Jan 19 2025

ஜப்பான் நிலநடுக்கத்தில் குடும்பத்துடன் சிக்கிய RRR திரைப்பட நடிகர்... டிரெண்டாகும் எக்ஸ் பதிவு

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ஜூனியர் என்டி ஆர் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது அங்கிருந்ததாக அவர் வெளியிட்ட பதிவுகள் வைரலாகி வருகின்றன. 


ஜப்பானில் ஹொன்ஷு தீவுகள் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 12.40 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவாகியிருந்தது. 90 நிமிடங்களில் அடுத்துத்து 21 முறை நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்பட்டன. அண்மைக்காலங்களில் இது போன்ற ஒரு நிலநடுக்கத்தை ஜப்பான் பார்த்ததில்லை. 


ஜப்பானின் மேற்கு கரையையொட்டியுள்ள பகுதிகளில் அதிக தாக்கம் உணரப்பட்டது. ஹொகைடோ தீவுகள் முதல் நாகசாகி வரை நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. இதனால் அந்த பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 1 முதல் 3 மீட்டர் உயரம் வரை, சில இடங்களில் 5 மீட்டர் உயரத்திற்கு கூட அலைகள் எழும் என எச்சரிக்கப்பட்டது. இதனால் மக்கள் உயரமான கட்டடங்களில் தஞ்சமடையுமாறு அறிவுறுத்தப்பட்டது. 


இந்த நிலையில் புத்தாண்டை கொண்டாட ஜூனியர் என்டிஆர் தனது மனைவி லட்சுமி பிரணதி, குழந்தைகள் அபய், பார்கவ் ஆகியோருடன் ஜப்பான் சென்றிருந்தார்.  ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆர், கடந்த ஒரு வாரமாக ஜப்பானில் இருந்து வந்தார்.

 

Advertisement

Advertisement