• Jan 18 2025

இது சாதாரண விஷயமில்லை, கண்டிப்பாக மாற்றிக் கொள்வேன்- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரவீனாவின் எமோஷனல் பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் காதல் ஜோடிக்கு பஞ்சமில்லாத ஒரு சீசனாக அமைந்தது. முதலில் மணி ரவீனா இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். ஒருகட்டத்தில் அது இருவரது கேமையும் பாதிப்பது தெரிந்ததும் இருவருமே அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். 

பின்னர் நிக்சனும், ஐஷுவும் ஒருபுறம் லவ் டிராக் ஓட்டிக் கொண்டிருந்தனர். இந்த காதல் எல்லைமீறி சென்றதால் மக்கள் கடுப்பாகி ஐஷுவை வெளியேற்றினர்.


 டிக்கெட் டூ பினாலே டாஸ்க்குகளில் வெற்றிபெற்று முதல் ஆளாக பைனலுக்குள்ளும் நுழைந்தார் விஷ்ணு. மேலும் கடந்த வாரம் நிக்சன் மற்றும் ரவீனா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளனர்.ரவீனா 91 நாட்கள் வீட்டில் இருந்த நிலையில் மணி உடன் எப்போதும் நெருக்கமாக இருக்கிறார், அவருக்கு ஆதரவாக விளையாடுகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் எலிமினேஷனுக்கு பின் ரவீனா முதல் முறையாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். அதில் எனக்கு சர்ப்போட் பண்ணிய எல்லோருக்கும் ரொம்ப நன்றி.இந்த ஷோவுக்கு போனது ஒரு வித்தியாசமான அனுபவமாக உள்ளது.இந்த வாய்ப்பைத் தந்த விஜய் டிவிக்கும் எனது நன்றி.


ம் "என்னுடைய behavioral shortcomings இருந்தால் அதை நான் மாற்றிக்கொள்கிறேன். உங்க எல்லாரோட feedbackஸ் நான் மனசார என்ட ஏத்துக்கிறேன்" என ரவீனா பதிவிட்டு இருக்கிறார். 


Advertisement

Advertisement