• May 02 2024

ஹரி மற்றும் மேகனுக்காக கண்ணீர் விட்டு கதறிய அரச உதவியாளர்கள், திட்டம் முன் தீர்மானிக்கப்பட்டது என வெளிவரும் அதிச்சித் தகவல்

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

கனடாவில் இருக்கும் போதே அரச குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற திட்டம் தீர்மானிக்கப்பட்டு விட்டது.இளவரசர் ஹரி மற்றும் மேகன் எங்கு செல்கிறார்கள் என்பது அவர்களின் நெருங்கிய உதவியாளர் லோரனுக்கு கூட தெரியாது.பிரித்தானிய அரச குடும்பத்தை விட்டு இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் வெளியேறிய போது அவர்களுடைய அரச ஊழியர்கள் கண்ணீர் விட்டு அழுததாக தெரியவந்துள்ளது.பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்க பெண்ணான மேகன் மார்க்கலை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அரச குடும்பத்தில் ஏற்பட்ட சில சலசலப்புகள் காரணமாக இருவரும் அரச பதவிகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரச வாழ்க்கையில் இருந்து விலகி கனடாவில் சிறிது காலம் தங்கி இருந்த இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஜோடி பிறகு நிரந்தரமாக அமெரிக்காவில் குடியேறினர்.

இந்நிலையில், தி டைம்ஸ் அரச நிருபர் வாலண்டைன் லோவின் தி ஹிடன் பவர் பிஹைண்ட் தி கிரவுன் என்ற புத்தகத்தில், இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஜோடி அரண்மனை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அரண்மனை கதவுகளுக்கு பின்னால் என்ன நடந்தது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.வாலண்டைன் லோவின் புத்தகத்தின் அடிப்படையில், இளவரசர் ஹரி மற்றும் மேகன் நவம்பர் 2019ம் ஆண்டு கனடாவுக்கு ஆறு வாரங்கள் சென்றபோதே அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவதற்கான அவர்களின் திட்டம் தயாராகி விட்டதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் இருவரும் எங்கு செல்கிறார்கள் என்று அவர்களது  நெருங்கிய உதவியாளர்  லோரனிடம் கூட சொல்ல மாட்டார்கள் என்றும், விமானம் காற்றில் இருக்கும் வரை அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று லோரனுக்கு (nanny: Lorren) கூட தெரியாது என அந்த புத்தகம் தெரிவித்துள்ளது.ஆனால் அந்த ஆண்டின் முடிவிற்கு சற்று முன்பு, மேகன் தனது ஊழியர்கள் ஒருவரிடம் மட்டும் தாங்கள் இருவரும் நாட்டிற்கு திரும்பி வரப்போவது இல்லை என தெரிவித்துள்ளார்.

ஜனவரி 2020 ஆண்டின் தொடக்கத்தில் பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்பு வரை மற்ற குழுவினர்களுக்கு இளவரசர் ஹரி மற்றும் மேகனின் முடிவு தெரியவில்லை.

இறுதியில் இளவரசர் ஹரி மற்றும் மேகனின் முடிவு தெரிய வந்தபோது, அவர்கள் தூக்கி அப்படியே எறியப்பட்டதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்ததாகவும், அவர்களில் சிலர் கண்ணீர் விட்டு அழுததாகவும் தெரியவந்துள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement