• Feb 08 2023

62 வயதில் 31 வயது இளம் நடிகையுடன் ரொமான்ஸ் கேட்குதா-இளம் நடிகையுடன் நெருக்கமாக மது அருந்திய நடிகர் பாலகிருஷ்ணா

Listen News!
stella / 1 week ago
image

Advertisement

Listen News!

தமிழ் திரைத்துறையில், எம்ஜிஆர் போலவே தெலுங்கு திரையுலகில் மக்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற நடிகராக இருந்தார் என்.டி. ராமராவ். தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் தலைவருமான அவரது மகன் தான் பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

62 வயதான நாதமுரி பாலகிருஷ்ணா தற்போது வரை ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாக அகாண்டா திரைப்படம் தமிழ்,தெலுங்கு என இருமொழியில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து, பாஸ் ஆபிசில் கல்லாக்கட்டியது. இந்த படத்தில் பாலகிருஷ்ணான இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.


இதையடுத்து, இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வீர சிம்ஹா ரெட்டி படம் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இந்த படத்தில், ஸ்ருதிஹாசன், வரலக்ஷ்மி சரத்குமார், ஹனி ரோஸ்,கன்னட நடிகர் துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.


வீர சிம்ஹா ரெட்டி படத்தின் சக்சஸ் மீட் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி ஹனி ரோஸூடன் பாலகிருஷ்ணா மிகவும் நெருக்கமாக கைகளை கோர்த்தபடி மது அருந்தி உள்ளனர். மலையாள நடிகர் ஹனி ரோஸுடன் நந்தமுரி பாலகிருஷ்ணா மது அருந்திய புகைப்படம் காட்டுத்தீ போல பரவ, 62 வயதில் 31 வயது இளம் நடிகையுடன் ரொமான்ஸ் கேட்குதா என் பாலகிருஷ்ணாவை கண்டபடி ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த படத்தில் ஹனி ரோஸ் பாலகிருஷ்ணாவின் மனைவியாக நடித்திருந்தார். இவர் தமிழில் ஜீவா நடித்த சிங்கம் புலி படத்தில் நடித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement