• Apr 20 2024

விமான நிலையத்தில் ரசிகர்களுடன் நிற்கும் அஜித்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்-செமயான புது லுக்கில் இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்து உருவாகிய திரைப்படம் தான் துணிவு. பொங்கலை முன்னிட்டு கடந்த 11ம் திகதி இப்படம் வெளியானது. இப் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி ரிலீஸ் செய்துள்ளது.


மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியது.துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.துணிவு படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.


AK62 படத்தின் டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் நடிகர் அஜித், சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அஜித்குமார் விமான நிலையத்தில் ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் நடிகர் அஜித் குமாரின் தோற்றம் ஆரம்பம், வீரம் படங்களில் உள்ளது போல் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement