• Oct 16 2024

முத்துவின் எங்கேஜ்மென்ட்க்கு முதல் ஆளா ஆஜரான ரோகிணி? மீனாவ காணலையே! போட்டோஸ்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

சின்னத் திரையில் பிரபல சீரியல் நடிகர், நடிகையாக வலம்  வருபவர்கள் தான் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி. இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியலில் நாயகனாக முத்து கேரக்டரில் நடிப்பவர் தான் வெற்றி வசந்த். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களால் கொடுக்கப்பட்டது. அதேபோல டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலையில் காணப்படுகின்றது. 

இதில் முத்துவாக நடிக்கும் வெற்றி வசந்த் குறுகிய காலத்துக்குள்ளையே தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை தனதாக்கி கொண்டார். சின்னத்திரையில் விஜய் சேதுபதி என அழைக்கப்படும் இவர், சீரியலில் முத்து கேரக்டராக மட்டுமில்லாமல் நிஜத்திலும் அதே கேரக்டர் போல தான் இருப்பார்  என அவருடைய நெருங்கிய நண்பர்கள் தெரிவித்திருந்தார்கள்.

அதேபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பொன்னி சீரியலில் நாயகியாக நடிப்பவர் தான் வைஷ்ணவி. இவர் அமைதியான மிகவும் பாவப்பட்ட ஒரு கேரக்டரில் நடித்து வருகின்றார். எல்லோரையும் நம்பும் நல்ல மனம் கொண்ட இவர், தற்போது தன்னை நிரூபிப்பதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டு இந்த சீரியலில் நடித்து வருகின்றார்.


இவ்வாறு இருவரும் பிரபலங்களாக காணப்படும் நிலையில், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு இருவரும் காதலிப்பதாகவும் தமக்கு எங்கேஜ்மென்ட் விரைவில் நடக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். அதன்படியே நேற்றைய தினம் இவர்களுடைய எங்கேஜ்மென்ட் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், தற்போது வெற்றி வசந்த் - வைஷ்ணவியின் எங்கேஜ்மென்ட்க்கு சென்றுள்ள சின்னத்திரை பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் ரோகிணி , மனோஜ்  ஆகியோர்  சென்றுள்ளனர். ஆனாலும் இந்த சீரியலில் மீனாவாக நடிக்கும் கோமதி பிரியாவை புகைப்படத்தில் காணவில்லை. இதனால் ரசிகர்கள் மீனா எங்கே கோவத்தில் வரவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

Advertisement